2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லிக் தொடரில் பங்கேற்ப்பதற்காக 31 இலங்கை கிரிக்கெட் விரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த தொடரில் விளையாடுவதற்கான பதிவுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லிக் தொடருக்காக ஆயிரத்து 97 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 814 இந்திய விரர்களும், 283 வெளிநாட்டு வீரர்களும் இவ்வாறு பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லிக் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.