மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மற்றுமொரு இலங்கை வீரர்!

- Advertisement -

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

36 வயதான அவர் இலங்கை அணிக்காக, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், தனது 15 வருடகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக, உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் அணி, மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பும் என தான் நம்புவதாகவும், உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழில் குழந்தையை தாக்கிய தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய், சிறுவர் சீர்திருத்தப்பளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது...

சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தபட்ட நாராங்கலை மலை..!

பதுளை மாவட்டத்தின் சொரணாத்தொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட Narangala மலையை சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாவாக்கலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்!

தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தலாவாக்கலை –...

யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Bernard lelarge யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாண...

தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரல்..!

இலங்கை கிரிகெட் அணி வீரர் தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது கிரிகெட் தொடருக்கான...

Developed by: SEOGlitz