மெய்ப்பொருள் காண்பது அறிவு

வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்த சமிந்த வாஸ்!

- Advertisement -

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி, தனது இராஜினாமா கடிதத்ததை இன்று சமர்பித்துள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தை இன்று இரவு மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது .

இதனிடையே, தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆலோசர் குழுவிலிருந்தும் தான் விலகவுதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஒரே தடவையில் நடப்பதை நிறுத்தவே இவ்வாறு செய்தோம்: சுமந்திரன் விளக்கம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரேநாளில் நடைபெறுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ள...

வன்முறை – தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பரிசுத்த பாப்பரசர் அழைப்பு!

வன்முறை மற்றும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு  பரிசுத்த பாப்பரசர் Francis ஈராக் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் Francis முதன்முறையாக இன்று ஈராக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே,...

Developed by: SEOGlitz