மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் விரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் இன்று முன்னெடுப்பு!

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள விரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கபட்டது.

2 கிலோமீற்றர் தூரத்தை ஓடி கடப்பதற்கான சோதனை இவ்வாறு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று முன்னெடுக்கபட்டது.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் வைிளையாடுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அணியின் 36 வீரர்களுக்கு இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்க்பட்டன.

இலங்கை கிரிக்கெட் விரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் இன்று முன்னெடுப்பு! 1

இதில் 32 வீரர்கள் பங்குப்பற்றியதாக ஶ்ரீலங்கா கெிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பின்னபற்றப்பட்டுவந்த யோ- யோ முறைமைக்கு பதிலாக இந்த புதிய உடற்தகுதி சோதனை முறைமை முன்னெடுக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், 2 கிலோமீற்றர் தூரத்தை 8 நிமிமும் 35 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

இதேவேளை, பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்டவிரர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு வெவ்வேறு நேர இலக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் விரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் இன்று முன்னெடுப்பு! 2

இந்த சோதனையில் தோல்வியுறும் வீரர்கள் 40 நாட்களுக்குள் மீண்டும் தமது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகத்தொடருக்கு முன்னர் அணி விரர்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதே நோக்கமாக அமைந்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உடல் செயல்திறன் தொடர்பான முகாமையாளர் கிராண்ட் லுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய சோதனையில் நான்கு விரர்கள் பங்கேட்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் விரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் இன்று முன்னெடுப்பு! 3

குசல் மெண்டிஸ், தனஞ்சயடி சில்வா, அவிஸ்க்க பெர்ணபன்டோ மற்றும் லஹிரு திருமான்ன ஆகியோர் இவ்வாறு இன்றைய சோதனையில் நான்கு விரர்கள் பங்கேட்கவில்லை எனவும்  ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz