மெய்ப்பொருள் காண்பது அறிவு

227 ஓட்டங்களால் வெற்றியை தன்வசப்படுத்திய இங்கிலாந்து அணி!

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

- Advertisement -

போட்டியில் 420 எனும் வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 192 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் Virat Kohli 72 ஓட்டங்களையும், Shubman Gill 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களையும், இந்திய அணி 337 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

அத்துடன், இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் Joe Root தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 க்கு 0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz