மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஶ்ரீ லங்கா கிரிகெட்டின் அபிவிருத்திக்காக புதிய குழு நியமனம்!

- Advertisement -

ஶ்ரீ லங்கா கிரிகெட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு, நான்கு பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால், இன்றைய தினம் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, குழுவின் தலைவராக இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ரொசான் மஹாநாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் குழுவின்  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத் துறை அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு சபை மற்றும் ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு, ஆலோசனைகளை வழங்குவதே, குறித்த குழுவின் முக்கிய பணியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப கிரிகெட் துறையை மேம்படுத்துவதும், நாட்டில் கிரிகெட் விளையாட்டை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதும்,  இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு, உரிய வழிகாட்டல்களை வழங்கும் எனவும், குறித்த குழுவிடமிருந்து எதிர்பார்ப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz