அபுதாபியில் இடம்பெற்று வரும் 10 ஓவர்கள் கொண்ட T10 லீக் தொடரின் 16 ஆவது போட்டியில் Qalandars அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் Qalandars மற்றும் Maratha Arabians ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Qalandars அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Maratha Arabians அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
102 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Qalandars அணி 8 தசம் 1 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்தது.
இதன்படி, Qalandars அணி 4 விக்கெட்டுகளினால் Maratha Arabians அணியை வெற்றி கொண்டது.
அத்துடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக Sohail Tanvir தெரிவு செய்யப்பட்டார்.