அவுஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் Merv Hughes இற்கு அவுஸ்திரேலியாவின் விளையாட்டுத் துறை சார்ந்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதான Hall of Fame விருது வழங்கப்பட்டுள்ளது.
Merv Hughes 1985 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 212 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், 1988 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது, 87 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியமை, அவரின் சிறப்பம்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
59 வயதான Merv Hughes, 33 ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் விளையாடி, 38 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், அவரை கௌரவிக்கும் வகையில், Sport Australia Hall of Fame விருது வழங்கப்பட்டுள்ளது.