இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இந்தியாவில் நடாத்தப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடாத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, போட்டிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.