தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
பாகிஸ்தான் -கராச்சியில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி, இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 33 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பாக, Nauman Ali 2 விக்கெட்டுகளையும், Shaheen Afridi 2 விக்கெட்டையும், Yasir Shah 3 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
தென்னாபிரிக்க அணி சார்பாக, Dean Elgar 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி, தென்னாபிரிக்க அணி 187 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.