மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!

- Advertisement -

இலங்கை அணியின் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ள உத்தேச அணியில் பெயரிடப்பட்டுள்ள வீரர்கள் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

- Advertisement -

குறித்த தொடரில் விளையாடவுள்ள அணி வீரர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு கொழும்பில் பயிற்சி பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குழு முறைமையில் பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை காரணமாக அனைத்து வீரர்களும் நேரடித் தொடர்பில் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான வீரர்கள் இருவரும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த வீரரர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய ஏனைய வீரர்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz