இந்திய டெஸ்ட் அணியின் பிரதிதலைவராக ரோஹித் சர்மா பெயரிடப்பட்டுள்ளார்.
இதன்படி, அவுஸ்திரேலிய அணியுடனான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில், ரோஹித் சர்மா இவ்வாறு பிரதிதலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அணியில் இணைந்த்துக்கொள்ளப்படுவார் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, விராத்கோலி மகபேற்று விடுமுறையில் சென்றிருந்த நிலையில், இந்திய அணியின் தலைவராக Ajinkya Rahane செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன், இந்திய அணியில் உமேஸ் யாதவ் உபாதைக்கு உள்ளாகி உள்ளமைக்கு காரணமாக, அவருக்கு பதிலாக ஷர்துல்தகூர் இணைக்கப்படுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், தமிழக வீரர் தங்கராசு நடராஜனும் அவுஸ்திரேலியாவிக்குஎதிரான மூன்றாவது டெஸ்ட்டில் விளையாடுவார்என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.