மெய்ப்பொருள் காண்பது அறிவு

101 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்திய நியூஸிலாந்து அணி!

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 101 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில், இன்றைய 5ஆம் நாள் ஆட்டத்தின்போது தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

- Advertisement -

முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 431 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 239 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இந்த நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி, 373 எனும் இலக்கை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது.

இதேவேளை, இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியூஸிலாந்து அணியின் Kane Williamson தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம்: பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 உயிரிழிப்புக்கள் பதிவு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த...

நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை!

பதுளை மாவட்டத்தின் சொர்னாத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களினால் சூழலுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையில்...

COVAX திட்டத்தின் அடிப்படையில் 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளது: சுதர்ஷினி அறிவிப்பு!

நாட்டுக்கு மேலும் 2 இலட்சத்து 64 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலமாக வழங்கப்படவுள்ள COVAX திட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக,...

மாணவர்களுக்காக பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஓர் விசேட திட்டம்..!

தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாட்டை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற  “SKILLS SRI LANKA”  தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப...

Developed by: SEOGlitz