நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி சற்று முன்னர் வரை 4 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 431 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 239 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.
இந்த நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி, 373 எனும் இலக்கை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.