நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
இந்த போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 431 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி 239 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.
இந்த நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி, 373 எனும் இலக்கை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.