இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் தென்னாபிரிக்க அணி 621 ஓட்டங்களைக் குவித்தது.
225 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் பல வீரர்கள் காயம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் உரிய ஓட்ட இலக்கை எட்ட முடியாத நிலைமை இலங்கை அணிக்கு காணப்பட்டது.
எனினும், காயமடைந்த போதிலும், Wanindu Hasaranga 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான Kusal Perera 64 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில், தென்னாபிரிக்க அணி சிறப்பான வெற்றியை இந்த போட்டியில் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, போட்டியின் சிறப்பாட்டக்காரராக 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட தென்னாபிரிக்க அணி வீரர் Faf du Plessis தெரிவு செய்யப்பட்டார்.