மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த வீரர்களுக்கான ICC விருது வழங்கல் விபரங்கள்

- Advertisement -

கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த வீரர்களுக்கான ICC விருது வழங்கல் விபரங்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த தசாப்தத்தின் கண்ணியமான கிரிக்கெட் விளையாட்டுக்கான விருது, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்த Ian Bell ஐ மீண்டும் துடுப்பெடுத்தாட அனுமதித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதே நிகழ்வுக்காக 2011 ஆம் ஆண்டின் ICC வருடாந்த விருது வழங்கல் நிகழ்விலும், கண்ணியமான கிரிக்கெட் விளையாட்டுக்கான விருது, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான Sir Garfield Sobers விருது மற்றும் கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் ஆகிய விருதுகளை இந்திய அணித் தலைவர் விராத் கோலி வென்றுள்ளார்.

அத்துடன், கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த இருபதுக்கு 20 வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான Rashid Khan தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த டெஸ்ட் அணியில், Virat Kohli, Kumar Sangakkara, Ashwin ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த ஒருநாள் அணியில், Rohit Sharma, Virat Kohli, மகேந்திர சிங் தோனி, Lasith Malinga ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த சாதரண தர பரீட்சை தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்த முக்கிய அறிவித்தல்..!

கல்விப்பொதுத்தராதர சாதராண தர பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து    சிசுசெரிய பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார வழிகாட்டுதலகளுக்கமைய சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்...

ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐ.நா சபை அழைப்பு..!

இந்து சமுத்திரத்தில் சிக்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில்...

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை...

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான்...

Developed by: SEOGlitz