இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 1 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் 3 ஒருநாள், 3 இருபதுக்கு 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடருக்காக இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளது.
இன்று (27) ஆரம்பமாகியுள்ள இந்த தொடர் எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று காலை 11.30 க்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
மேலும் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இரவு 9.30 க்கு இடம்பெறவுள்ளது.