மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆட்சேபித்து நுவன் சொய்சா மேன்முறையீடு!

- Advertisement -

தனக்கு எதிராக சர்வதேச கிரிகெட் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நுவன் சொய்சா தெரிவிக்கின்றார்.

சர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில விதிமுறைகளை மீறியதாக நுவன் சொய்சா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இதன்படி, குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிகெட் பேரவை அறிவித்திருந்தது.

எனினும், ஏனைய வீரர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டே, இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரிகெட் பேரவையின் தலைவர் குறிப்பிட்டிருந்தத நிலையில், தான் குற்றவாளி என தற்போது தெரிவித்துள்ளமையானது கவலையளிப்பதாக நுவன் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  சர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு, தன்மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு இதுவரை காரணங்களை முன்வைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில், சுவீட்சர்லாந்தில் உள்ள விளையாட்டு சபைக்கும் பிரித்தானிய உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீடு செய்யவுள்ளதாக  நுவன் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிக்கும், இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இது தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற டி20 கிரிகெட் தொடர் தொடர்பில், நுவன் சொய்சா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டித் தொடரில், நுவன்சொய்சா பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்தார்

இந்த நிலையில், குறித்த போட்டித் தொடர்பில் நுவன்சொய்சா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக தற்காலிக போட்டித் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், நுவன் சொய்சா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz