மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 ஆம் ஆண்டு – பர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு தொடர் தொடர்பான அறிவிப்பு!

- Advertisement -

2022ஆம் ஆண்டுக்கான பர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு தொடரில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை இணைத்துக் கொள்வதற்கான செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுநலவாய போட்டிகளுக்கான கூட்டமைப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியன இணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இதன்படி எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த தொடரில் 8 மகளிர் அணிகள் பங்குபற்றவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

தரப்படுத்தலில் முதல் 6 இடங்களை பெறும் அணிகள் மற்றும் தகுதிகாண் போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் ஆகிய 8 அணிகள் இந்த தொடருக்கு தகுதி பெறவுள்ளன.

இதேவேளை 1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கோலாலம்பூர் பொதுநலவாய விளையாட்டு தொடரில் ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் இடம்பிடித்ததன் பின்னர் இரண்டாவதாக இடம்பிடிக்கும் கிரிக்கெட் போட்டி இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz