மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊழல் தடுப்பு தொடர்பான ஶ்ரீ லங்கா கிரிகெட் சபையின் விசேட திட்டங்கள்!

- Advertisement -

LPL கிரிகெட் தொடரின் போது, ஊழல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா கிரிகெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, ஶ்ரீ லங்கா கிரிகெட் மற்றும் சர்வதேச கிரிகெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு என்பன, இது தொடர்பில் கண்காணிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், போட்டிகள் நடைபெறும் சந்தர்ப்பத்திலும், LPL தொடர்பில் ஹோட்டல்கள் மற்றும் வேறு இடங்களில் நடைபெறும் அதிகார நிகழ்வுகள் குறித்தும், விழிப்புடன் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைளுக்காக, உரிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என ஶ்ரீ லங்கா கிரிகெட் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் போட்டிகளுடன் தொடர்புடைய அதிகாரிகள், ஊழல்கள் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஊழல்கள் தொடர்பான முறைப்பாடுகளை, LPL தொடருக்காக நியமிக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு முகாமையாளர்களிடம் முன்வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், போட்டிகள் இடம்பெறும் காலப்பகுதியில், ஊழல் மோசடி செயற்பாடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான விடயங்களை முன்வைப்பதற்கு, 24 மணித்தியால தொலைபேசி செயற்பாட்டுப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz