மெய்ப்பொருள் காண்பது அறிவு

Kings XI Punjab அணிக்கெதிரான போட்டியில் Rajasthan Royals அணிக்கு வெற்றி!

- Advertisement -

13ஆவது IPL தொடரின் 50 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி Kings XI Punjab அணியை 07 விக்கெட்டுக்களினால் வெற்றி கொண்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் Abu Dhabi இல் அமைந்துள்ள Sheikh Zayed விளையாட்டரங்கில் இந்த போட்டி இடம்பெற்றது.

- Advertisement -

Kings XI Punjab அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Rajasthan Royals அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Kings XI Punjab அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Kings XI Punjab அணி சார்பில், கிறிஸ் Gayle 99 ஓட்டங்களையும், கே எல் Rahul 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்த நிலையில் 186 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Rajasthan Royals அணி 17 ஓவரின் மூன்று பந்துகள் வீசப்பட்ட நிலையில்  3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

Rajasthan Royals அணி சார்பில், Ben stokes 50 ஓட்டங்களையும், Sanju Samson 48 ஓட்டங்களையும் அதிகபட்சமாக  பெற்றுக் கொடுத்தனர்.

அத்துடன் போட்டியின் சிறப்பாட்டக்காரராக, Ben stokes தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமேசான் வனப்பகுதியில் தொடரும் காடழிப்பு!

அமேசான் வனப்பகுதியில் 2008 ஆம் ஆண்டு முதல் பாரிய வன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சூழலியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அமேசான் வனப்பகுதியில் பரியளவிலான வனப்பகுதி அழிக்கப்படுவதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ இடமளித்திருப்பதாக...

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு !

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்தன. கொழும்பில் அமைந்துள்ள கெப்பிட்டல் எப்.எம் கலையகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், விசேட பூஜை வழிபாடுகளுடன் இந்த...

நாட்டைத் தாக்கவுள்ள ஆபத்து : வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல தாழமுக்கமானது திருகோணமலையில் இருந்து 500 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களமானது இன்று விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாழமுக்கமானது அடுத்துவரும்...

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்!

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் : அங்கஜன் கோரிக்கை!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான...

Developed by: SEOGlitz