மெய்ப்பொருள் காண்பது அறிவு

Sunrisers Hyderabad அணிக்கு எதிரான போட்டியில் Kings XI Punjab அணி வெற்றி!

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Sunrisers Hyderabad அணிக்கு எதிரான நேற்றைய நாள் இடம்பெற்றப்  போட்டியில் Kings XI Punjab அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

13ஆவது இந்தியன் பிரீமியர் லீக்  தொடரின் 43 ஆவது போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Sunrisers Hyderabad  அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய Kings XI Punjab  அணி, 7 விக்கெட் இழப்பிற்கு  126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 127 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad  அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, Kings XI Punjab அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுக்கொண்டது.

அத்துடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக Kings XI Punjab அணியின் Chris Jordan தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் : அங்கஜன் கோரிக்கை!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான...

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறைவேற்றுப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தினது பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் லீ சிங் மேயின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்எம் இன் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த, ஆதரவாக இருக்கின்ற...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : முகாமைத்துவப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமதி வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். எமது...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறுவனத் தலைவரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத் தலைவர் சதாசிவம் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைப் பெருமையுடன் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நாம்...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 32 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிசெயற்பட்ட மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர  காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா...

Developed by: SEOGlitz