மெய்ப்பொருள் காண்பது அறிவு

சன்ரைசர்ஸ் அணியை வென்றது சென்னை!

- Advertisement -

IPL தொடரின் Sunrisers Hyderabad அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் Chennai Super Kings அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம், Chennai Super Kings அணி 6 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

அத்துடன், 8 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளைப் பெற்றுள்ள Sunrisers Hyderabad அணி, நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Chennai Super Kings அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Chennai Super Kings அணி சார்பில், Shane Watson 42 ஓட்டங்களையும், Ambati Rayudu 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

168 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி, 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Sunrisers Hyderabad அணி சார்பில், Kane Williamson 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன் அடிப்படையில், Chennai Super Kings அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மேலும், போட்டியின் சிறந்த ஆட்ட வீரராக Ravindra Jadeja தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz