மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPl தொடரின் 25 ஆவது போட்டியில் R.C.B அணி வெற்றி!

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 25 ஆவது போட்டியில் Royal Challengers Bangalore அணி 37 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 25 ஆவது போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று  இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

- Advertisement -

இந்தப் போட்டியில் Royal Challengers Bangalore மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற  Royal Challengers Bangalore  அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த  Royal Challengers Bangalore  அணி 4 விக்கெட்டுகளை இழந்து 169  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  Chennai Super Kings அணி  ஆட்டம் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, இந்தப் போட்டியின் சிறந்த வீரராக  Royal Challengers Bangalore  அணிக்காக ஆட்டமிழக்காமல்  90 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த Virat Kohli தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அக்கரைப்பற்று பகுதியில் 24 பேரும் திருக்கோவில் பகுதியில் மூவரும்  தமன...

Developed by: SEOGlitz