மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL : Delhi Capitals அணி வெற்றி!

- Advertisement -

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது போட்டியில் Delhi Capitals அணி 46 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று  இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

- Advertisement -

இந்தப் போட்டியில் Delhi Capitals மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Rajasthan Royals அணி  முதலில்  களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய  DELHI அணி  20  ஓவர்கள் நிறைவில்  8 விக்கெட்டுகளை  இழந்து 184  ஓட்டங்களை  பெற்றுக்கொண்டது.

185 எனும்  வெற்றியிலக்கை நோக்கி  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   RAJASTHAN  அணி 19 ஆவது ஓவரில் 04 பந்துகள் வீசப்பட்ட நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது,

இதன்  ​போது டெல்லி அணி சார்பில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியின் நாயகனாக தெரிவானார்.

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தரவரிசைப்பட்டியலில் Delhi Capitals அணி முதலாவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் இடத்திலும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz