மெய்ப்பொருள் காண்பது அறிவு

விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – நாமல் ராஜபக்‌ஷ கருத்து!

- Advertisement -

தற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

பிள்ளைகள் விளையாடுவதால் கல்வி கற்க முடியாது என்றதொரு கருத்து பெரும்பாலான பெற்றோர்களிடத்தில்  நிலவுகின்றது. அதேபோன்று மறுபக்கம் இன்றைய கல்வி முறைமைக்குள் மாணவர்கள் மைதானத்திற்குச் சென்றால் மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்காக பெற்றோர்களைக் குறை கூறுவதில் நியாயமில்லை. ஏனெனின் நாட்டில் காணப்படும் கல்வி முறைமைக்கு அமைய, போட்டி மிக்க பரீட்சை முறைமைக்கு அமைய அதனை எதிர்கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்துகின்றனர். ஆனால், தற்போது கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் நாட்டில் காணப்படும் கல்வி முறைமை மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளது மாத்திரமல்ல, ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளார். கல்வி முறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில்  ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை முதலில் கேகாலையில்தான் ஆரம்பமாகுமென நினைக்கின்றேன். அத்துடன், 25 விளையாட்டுத்துறை சார்ந்த  பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இந்த 25 பாடசாலைகளிலும் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி  நிலையங்களை அமைத்து அவற்றுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!

13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்த போட்டி,...

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

Developed by: SEOGlitz