மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி!

- Advertisement -

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது.

- Advertisement -

இதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Delhi Capitals அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Sunrisers Hyderabad அணி சார்பில், Jonny Bairstow 53 ஓட்டங்களையும், David Warner 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Delhi Capitals அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

Delhi Capitals அணி சார்பில், Shikhar Dhawan 34 ஓட்டங்களையும், Rishabh Pant 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆட்ட நாயகனாக, Sunrisers Hyderabad அணியைச் சேர்ந்த Rashid Khan தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில், Rajasthan Royals முதலாவது இடத்திலும், Delhi Capitals இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூப்பரான நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு Pancake என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் -...

கொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உயிரிழப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த...

Developed by: SEOGlitz