மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்க நடவடிக்கை: நாமல் தெரிவிப்பு!

- Advertisement -

நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சர்வதேச ரீதியில் விளையாட்டு துறை ஸ்தம்பித்து போயிருந்தது. இந்த நிலையில் நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை அனைந்து நாடுகளும் அறிந்த ஒரு விடயம் அதற்கு அமைவாக சர்வதேச விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது. இதற்கமைவாக கொரோனா தடுப்பு பிரிவுடன் கலந்துரையாடி இந்த போட்டிகளை நடாத்துவது குறித்து சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை,  பங்களாதேஸ் அணியின் இலங்கை விஜயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சுகாதார நியமங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  ipl மற்றும் இல்கிலாந்து கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஆரம்பிக்க்டப்டுள்ளன. இதிலே கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட  வீரர்களை உள்வாங்கி அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தி போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே இதற்கு அமைவாக நமது நாட்டிலும் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிப்பது குறித்து விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்தில் பிற்பகல்...

Developed by: SEOGlitz