மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்த பங்களாதேஷ்!

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள பங்களாதேஷ் அணி வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிஸாமுதீன் சௌத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

- Advertisement -

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்காக தற்போது விதிக்கப்படும் 14 நாள் தனிமைப்படுத்தல் காலம் மிக அதிகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிஸாமுதீன் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக பங்களாதேஷ் அணி எதிர்வரும் 27ஆம் திகதி பயணமாகவுள்ளதுடன், ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

இதற்காக 24 பேர் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த குழுவினர் பங்களாதேஷில் ஒரு வார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் குறித்த குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளிலும், விமான பயணத்துக்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னதாகவும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும்: விஜயபால குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்தம், அரசாங்கத்திங்கு எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அத்துடன்,...

IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...

குவைத்தில் புதிய மன்னர் நியமனம்: அமைச்சரவை தீர்மானம்!

குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed பெயரிடப்பட்டுள்ளார். குவைத்தின் மன்னராகப் பதவி வகித்த Sheikh Sabah al-Ahmed al-Sabah, தனது 91 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்ததை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு 05...

Developed by: SEOGlitz