மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில்!

- Advertisement -

இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது.

- Advertisement -

இந்த தொடரின் முதலாவது போட்டில் இங்கிலாந்தின் Manchester மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற இங்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுக்களை இழந்து, 294 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி  சார்பில் Glenn Maxwell 77 ஓட்டங்களையும், Marcus Stoinis 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த நிலையில், 295 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் Sam Billings 118 ஓட்டங்களையும் Jonny Bairstow 84 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணி  சார்பில் Adam Zampa 10 ஓவர்கள் பந்து விசி, 55 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதேவேளை, இந்த போட்டியின் ஆட்டநாயகனாக Josh Hazlewood தெரிவானார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் இரண்டாவது நாளாக இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தறவு...

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

Developed by: SEOGlitz