ரசிகர்கள் அற்ற நிலையில் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவது என்பது சரியானதாக இருக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
16 அணிகள் உள்ளடங்கிய 7-வது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள சரவ்தேச கிரிக்கட் சபை நடாத்தவுள்ள கூட்டத்தில்
இந்த ஆண்டிற்கான இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்கள் குறித்த இறுதி தீர்மானமானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் பார்வையாளர்கள் அற்ற நிலையில் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவது குறித்த யோசனை முரனானது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிக பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய கிரிக்கட் போட்டித்தொடர்கள் ரசிகர்கள் அற்ற நிலையில் முடிய அரங்கிற்குள் நடாத்துவது உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியாது என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது