இந்த வருடத்திற்கான இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் குறித்த இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இன்று நடாத்தப்படவுள்ள கூட்டத்தில் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 அணிகள் பங்கேற்கவுள்ள 7-ஆவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டிற்கான இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்கள் குறித்த இறுதி தீர்மானம் இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.