கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களில் எவரேனும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில் குறித்த போட்டித் தொடர்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானம் கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போட்டியில் பங்குபற்றும் அணி வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில் போட்டிகளை இடைநிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
குறித்த சந்தர்ப்பங்களில் மாற்று வீரர்களை ஈடுபடுத்துவதங்னு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இங்கிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கட் அணி, போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள் உட்பட மாற்று வீரர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது .
இதேவேளை கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்பு ஆரம்பிக்கப்படும் முதல் கிரிக்கட் போட்டி தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது