மெய்ப்பொருள் காண்பது அறிவு

T20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் குறித்த விசேட கலந்துரையாடல்

- Advertisement -

இந்த ஆண்டுக்கான  இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் நாடாத்துவது தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்பு கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

16 அணிகள் பங்கேற்கவுள்ள  7-ஆவது இருபதுக்கு 20  உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல்  நவம்பர் மாதம்  15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில்   நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருபதுக்கு  20  உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள்  அவுஸ்திரேலியாவில் இடம்பெறுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

இந்த நிலையில்  இந்த ஆண்டிற்கான இருபதுக்கு 20  உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்கள் குறித்த இறுதி தீர்மானம் இன்று நடைபெற்றுவருகின்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குறித்த கூட்டத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கட் தொடர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

Developed by: SEOGlitz