மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பதிலுக்காக காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவிப்பு!

- Advertisement -

இலங்கையுடனான கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பதிலுக்காக காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கை கிரிக்கெட் சபை தனது வீரர்களின் பாதுகாப்பில் கொண்டுள்ள அக்கறையானது வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர்களது பதிலிற்காக மதிப்பளிப்போம் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், சுற்றுப்பயணத்திற்கு ஏறக்குறைய இரண்டு மாத காலம் இருப்பதைக் கருத்தில் கொண்டே தாம் விரைவாக கருத்து தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொற்றுநோயினது நிலமை தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருப்பதால் தமது வீரர்களின் பாதுகாப்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

எனவே குறித்த போட்டித் தொடர்களை நடத்துவது தொடர்பான இலங்கை கிரிக்கெட் சபையினது சாதகமான பதில் விரைவில் கிடைக்குமென நம்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை
தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்!

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...

அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz