மெய்ப்பொருள் காண்பது அறிவு

2023 மகளிர் உலகக்கிண்ண கால்பந்து  தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் விலகல்

- Advertisement -

2023ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் கால்பந்து சபை விலகியுள்ளதாக, சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தியோகபூர்வமாக  அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பிரேசிலில் பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அநடத நாடு நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கிண்ண தொடரை நடத்துவதில் இருந்து  விலக பிரேசில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இதனைத்தொடர்ந்து 32 அணிகள் பங்குபற்றவுள்ள மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை  நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து நடாத்துவதற்கு பிரேசில் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கிண்ண கால்பந்து  போட்டியை நடத்தும் நாடு எதிர்வரும் 25ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz