ஆஸ்திரேலிய கிரிக்கட் சபையின் இந்த ஆண்டின் தேசிய ஒப்பந்ததில் 6 முக்கிய விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று சர்வதேச ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் தேசிய ஒப்பந்தத்தில் இருந்து ஷோன் மார்ஷ், உஸ்மான் க்வாஜா, பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நொதர்ன் கவுல்டர்னைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகிய 6 முக்கிய விளையாட்டு வீரர்கள் இவ்வாறு இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் ஷோன் மார்ஷ் சகோதரரும் சகல துறை ஆட்டக்காரருமான மிட்ஷேல் மார்ஷ் இந்த ஆண்டிற்கான தேசிய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை புதுமுக வீரர்களான லபுஷேன், ஜோ பர்ன்ஸ், ஆஷ்டன் ஆகர், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோருக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,