மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹோமாகமையில் பாரிய கிரிக்கெட் மைதானம்!

- Advertisement -

இலங்கையில் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகமை – தியகம பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இந்த மைதானத்துக்கான உத்தேச இடத்துக்கான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த கண்காணிப்பு விஜயத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரியந்த பந்து விக்ரம, நகர அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர மற்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிக்காக 26 ஏக்கர் பரப்பளவிலான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பகல் – இரவு போட்டிகளையும் நடத்தக்கூடிய வகையில் மைதானம் நிர்மாணிக்கப்படும் எனவும், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதலாம் கட்ட நிர்மாணப் பணிகளின்போது 40 ஆயிரம் ஆசனங்களைக் கொண்ட அரங்கம் உருவாக்கப்படும் எனவும், இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின்போது மேலும் 20 ஆயிரம் ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தமாக, 60 ஆயிரம் ஆசனங்களைக் கொண்ட அரங்கமாக உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...