மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஶ்ரீ லங்கா கிரிகெட் விடுக்கும் அறிவிப்பு!

- Advertisement -

இலங்கை தேசிய கிரிகெட் அணியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்கள் நாளை முதல் பயிற்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளின் கீழ், பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வீரர்களைக் கொண்ட குழு கொழும்பில், 12 நாள் தங்கவைக்கப்பட்டு பயிற்சிகளுக்கு ஈடுப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இதன்போது பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களின் உடல் நிலை மிகவும் உற்சாகத்துடன் இருக்க வேண்டிய காரணத்தினாலேயே, முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பயிற்சியில் ஈடுபடும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஶ்ரீ லங்கா கிரகெட் மேலும் குறிப்பிட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரான்ஸின் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் இன்று முதல் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி manuel Macron  தெரிவித்துள்ளார் இதேவேளை கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளை மீறி பரிஸ் நகரில் இருந்து பெரும்பாலானவர்கள்...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்படி, இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை...

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0...

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

Developed by: SEOGlitz