மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கப்ருக” திட்டத்தின் கீழ் தென்னங்கன்று நடுகை -யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அங்குரார்ப்பணம்…!

- Advertisement -

வீட்டுக்கு வீடு தென்னை மரம் “கப்ருக” திட்டத்தின் அடிப்படையில் 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

- Advertisement -

இதற்கமைய, கரவெட்டி பிரதேசத்தில் 500 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கருத்துரைத்த நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், பனைசார் உற்பத்திக்கு நிகராக தென்னைசார் உற்பத்தியிலும் சிறந்து விளங்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன், தமது மண்ணின் தென்னைசார் உற்பத்திகளின் ஊடாக வேறு பிரதேசத்தவர்கள் வருமானத்தை ஈட்டுவதை விட, தமது மக்களே அதன் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு விடயத்தையும் வணிகமயப்படுத்தி அதனூடாக வருமானத்தை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz