மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்த நாகமுவவின் மனைவியினால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல்.

- Advertisement -

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

துமிந்த நாகமுவவின் மனைவி என். துலானி ப்ரியங்கிகாவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

- Advertisement -

இதன்படி, மனுவின் பிரதிவாதிகளாக, பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, கொழும்பு மாநகர பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி, பல்லேகல கூட்டுறவு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 07 ஆம் திகதி, கொழும்பு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, தனது கணவர் கைது செய்யப்பட்டு, மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், தனது கணவர் பொலிஸாரினால் பலாத்காரமான முறையில், பல்லேகல கூட்டுறவு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பொலிஸாரின் இந்த செயற்பாடானது, சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சட்டவிரோதமான முறையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனது கணவரை, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு, மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz