மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையத்தளம் ஊடாக சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த இரண்டு பேருக்கு விளக்கமறியல்

- Advertisement -

கல்கிஸ்ஸை பகுதியில், இணையத்தளம் ஊடாக 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்மலானை பகுதியை சேர்ந்த முன்னாள் வங்கி முகாமையாளர் ஒருவரும், பொலிஸ் அதிகாரி ஒருவருமே சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட, சந்தேகநபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகம் ஆகியன இணைந்து முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமியின் கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகள் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐயாயிரம் பேரை, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்வதற்கு, இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிநுட்ப விசாரணைகளின் அடிப்படையில், இந்த விடயம் தெரியவந்துள்ளதாக, குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிறுமிகள் மற்றும் பெண்களை விற்பனை செய்வதற்காக, விளம்பரங்ளை பதிவேற்றியுள்ள பல்வேறு வலைத்தளங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் ஐயாயிரம் பேர் விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வளைத்தளங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான வளைத்தளங்களை தடை செய்ய நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz