மெய்ப்பொருள் காண்பது அறிவு

STORY OF THE DAY: நாட்டின் பொருளாதாரம் குறித்து ஆளும், எதிர்த் தரப்பினர் வெளியிட்ட கருத்துகள்…!

- Advertisement -

மக்களின் வாழ்கையை பாதிக்கின்ற வகையிலான அரசாங்கத்தின் தீர்மானங்கள் காரணமாக பொது மக்கள் சுயமாக போராட்டங்களை முன்னெடுக்க தயாராகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“பொது மக்கள் தங்களுடைய சரளமான மொழியில் தங்களது விருப்பங்களையோ அல்லது வெறுப்பக்களையோ தெரிவிப்பதற்கு இலங்கையின் அரசியலமைப்பில் அதிகார்ஙகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களை கட்டுப்படுத்தவும் அரசியலமைப்பில் இடமில்லை. எனினும் அரசாங்கம் சட்டத்திற்கு முரணாகவே சில நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. அதனாலேயே நாங்கள் உயர்நீதிமன்றத்தையும் நாடியுள்ளோம். கொரோனா என்ற போர்வையில் அரசாங்கம் மக்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றது. கடந்த ஒன்றரை மாத காலமாக மக்கள் சுயமாக அராசாங்கத்திற்கு எதிராக போராட்ங்களை முன்னெடுக்க தயாராகிவிட்டனர். சுகாதார துறையினர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அதேபோன்று விவசாயிகள் உரத்திற்காகவும், பொது மக்கள் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பிற்காகவும், இதன்போதே அரசாங்கம் திட்டமிட்டது. என்னவென்றால் பொதுமக்களின் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு, அதற்கு கொரோனாவையும் பயன்படுத்தியுள்ளது. ஆகையினால் நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளோம். நேற்றும் போராட்டங்களை முன்னெடுத்தோம். அரசாங்கம் தற்போது எடுத்துள்ள தீர்மானங்கள் முழுமையாக சட்டத்திற்கு விரோதமாகும்.”

இதேவேளை, நாட்டை மீண்டும் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை நாட்டினது அந்நியசெலாவணியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் கடன்சுமை 3 ஆயிரத்து 22 பில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நான் புதிய விடயம் ஒன்றை தெரிவிக்க வருகை தந்துள்ளேன். இதுவரை யாரும் இந்த விடயத்தை தெரிவிக்கவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியின் போது அரசாங்கத்தின் முழுமையான கடன்சுமை 16 ஆயிரத்து 53 பில்லியன் ரூபாய்களாகும். அதாவது சுமார் 15 மாதங்களுக்கு அரசாங்கம் 3 ஆயிரத்து 22 பில்லியன் ரூபாய்களாக கடனை அதிகரித்துக்கொண்டுள்ளது. 60 மாதங்களுக்கு 5545 பில்லியன் ரூபாய் கடனாகும். 15 மாதங்களுக்கு 3022 பில்லியன் ரூபாய் கடன்களாகும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் ராஜபக்சர்களின் ஆட்சியின் போது, பெசில் ராஜபக்ச ஆலோசனையாளராக கடமையாற்றியுள்ள கடந்த 15 மாதங்களில் ஒரு குடும்பத்திற்கு 6 இலட்சத்து 4 ஆயிரத்து 440 ரூபாயாக கடனை அதிகரித்துள்ளனர்.”

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz