மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தடுப்பூசி தொடர்பான தற்போதைய முழு நிலவரம் -விபரம் உள்ளே…!

- Advertisement -

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1 இலட்சத்து 32 ஆயிரத்து 510 பேருக்கு sinipharm தடுப்பூசியின் முதல் அளவும், 34 ஆயிரத்து 555 பேருக்கு இரண்டாவது அளவும் செலுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், ஏழு ஆயிரத்து 614 பேருக்கு Pfizer தடுப்பூசியின் முதலாவது அளவும், ஆயிரத்து 145 பேருக்கு Covishield தடுப்பூசியின் இரண்டாவது அளவும் நேற்று செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில், 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு Covishield தடுப்பூசியின் முதல் அளவும், மூன்று இலட்சத்து 85 ஆயிரத்து 4647 பேருக்கு இரண்டாவது அளவும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், sinipharm தடுப்பூசியில் 28 இலட்சத்து 56 ஆயிரத்து 147 பேருக்கு முதல் அளவும், 10 இலட்சத்து 23 ஆயிரத்து 125 பேருக்கு இரண்டாவது அளவும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1 இலட்சத்து 14 ஆயிரத்து 795 Sputnik V கொரோனா தடுப்பூசி முதல் அளவும், 14 ஆயிரத்து 464 பேருக்கு இரண்டாவது அளவும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு அமைய 11 ஆயிரத்து 69 பேருக்கு Pfizer கொரோனா தடுப்பூசி முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் இருந்து 2 மில்லியன் sinopharm கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான இரண்டு விசேட விமானம் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள sinopharm கொரோனா தடுப்பூசிகள் விமான நிலைய களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடன் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இரண்டு மில்லியன் sinopharm தடுப்பூசிகளில், கொழும்பு மாவட்டத்திற்கு 2 இலட்சம் தடுப்பூசிகளும், கம்பஹா மாவட்டத்திற்கு 5 இலட்சம் தடுப்பூசிகளும், களுத்துறை மாவட்டத்திற்கு 3 இலட்சம் தடுப்பூசிகளும் பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்டவுள்ளது.

அத்துடன், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு இலட்சம் சினர்பம் தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அத்துடன், குருணாகலை மாவட்டத்திற்கு 2 இலட்சம் தடுப்புசிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்குமாறும் சுகாதார தரப்புக்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1.47 மில்லியன் எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிகள் அடுத்தவாரமளவில் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும், அதில் 7 இலட்சம் தடுப்பூகளை கொழும்பு மாவட்டத்திற்கென ஒதுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமான எஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிகளை கேகாலை மாவட்டத்திற்கு முதலாம் மற்றும் இரண்டாம் அளவுகளுக்காக பயன்படுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதை கடந்த அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி வழங்கபட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz