மெய்ப்பொருள் காண்பது அறிவு

14 இலட்சம் astrazeneca 3ஆம் வாரத்தில் கிடைக்கும் -கொழும்பில் pfizer இடைநிறுத்தம்…!

- Advertisement -

astrazeneca கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது அளவாக pfizer தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் மூன்றாம் வாரமளவில் 1 தசம் 4 மில்லியன் astrazeneca   கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

- Advertisement -

இந்த நிலையில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி பெறுவதற்காக குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்பட்டவர்கள்  இன்று  சமூகமளிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் தடுப்பு நிபுணர்  தினுகா குருகே தெரிவித்துள்ளார்

இதேவேளை கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக astrazeneca தடுப்பூசி செலுத்தப்பட்ட 55 முதல்  69 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது அளவாக pfizer  தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி நேற்றைய நாளில் 2 ஆயிரத்து 171 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே  60 வயதுக்கு மேற்பட்டவர்களுள் கொரோனா தடுப்பூசியினை பெறுபவர்களின் சதவீதம் குறைவடைந்துவருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்  எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz