மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது -பிரதமர்

- Advertisement -

நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற 131 ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் சோமாவதிய மற்றும் ரிதி விகாரை ஆகியன தொல்பொருள் ஆராய்ச்சி மையமாக பெயரிடப்பட்டன.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் www.archaeology.gov.lk எனும் புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு காரணங்கள் நிமித்தம் இலங்கையில் காணப்படும் பாரம்பரிய இடங்கள் நீண்ட காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டின் மரபுரிமையை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய,  ஜனாதிபதியினால்   செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஒரு இனம் மற்றும் மதத்திற்கு மாத்திரம் உரித்தானவை அல்ல எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதன் போது சுட்டிகாட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz