மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு –அமைச்சரவை பொறுப்புக்களில் மாற்றம்

- Advertisement -

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ச இன்று  நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், பசில் ராஜபக்சவுக்கு ஆளும் தரப்பிற்குரிய முன்வரிசையில் 9 ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியமையைத் தொடர்ந்து குறித்த பதவிக்கான வெற்றிடம் நிலவுவதாக நாடாளுமன்ற செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணைக்குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் பெயரை ஜயந்த கெட்டகொடவின் வெற்றிடத்திற்கு பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து பசில் ராஜபக்சவை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அவர் இன்று தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் அமைச்சரவைக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சர் எனும் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று புதிதாக பெயரிடப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கமைய, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான கொள்கை அபிவிருத்தி மற்றும் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் குறித்த அமைச்சுக்கான பிரதான நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியும் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், நிதி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்குரிய விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz