மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணத்தில் பங்கேற்க இலங்கை வீரர்கள் இணக்கம்…!

- Advertisement -

இங்கிலாந்துக்கான எதிர்வரும் கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் தொடர்பில் இங்கிலாந்து தொடரின் பின்னர் தீர்மானிப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிப்படையான நிபந்தனைகள் இணைக்கப்படும் பட்சத்தில் மாத்திரமே இங்கிலாந்துக்கான எதிர்வரும் கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியும் எனவும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆகியோருக்கு இடையில் புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஒருமித்த கருத்தொன்றை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், போட்டித் தன்மை மிக்க கொடுப்பனவுகளின் மூலம் வீரர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், குறித்த காரணியானது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தீர்மானிக்கும் விடயமாக அமையக்கூடாது எனவும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இதே போன்ற சிக்கல்கள் கடந்த காலங்களிலும் ஏற்பட்டிருந்த போதிலும், அப்போதைய வீரர்கள் தொடர்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz