மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டு மக்களுக்கு வர்த்தக வங்கிகள் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்…!

- Advertisement -

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு, பல்வேறு வர்த்தக வங்கிகளும் தமது சேவையை மட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் என, ஹற்றன் நெஷனல் வங்கி அறிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், நாளை முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, தேசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.

மேலும், தமது அனைத்து 365 நாள் வங்கிக் கிளைகளும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும், தேசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், நாளை முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தமது அனைத்து கிளைகளும், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என, சம்பத் வங்கி அறிவித்துள்ளது.

அத்துடன், வார இறுதி, விடுமுறை நாள் வங்கிச் சேவைகள் மற்றும் நீடிக்கப்பட்ட வங்கிச் சேவைகள் ஆகியன மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் எனவும், சம்பத் வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

துப்பாக்கி சூட்டு சம்பத்தில் உயிரிழந்தவருக்கும் தனக்கும் எவ்வித பகையும் இல்லை

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு, தன்னுடன் எந்தவிதமான முறுகலும் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தவறான விடயங்கள் பரப்பபட்டுவருவதாகவும், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Developed by: SEOGlitz